திருக்குறள் கூறும் வாழ்க்கை நெறி
பள்ளிக்கூடங்களில் , நமது பேருந்துகளில் திருக்குறளை படித்தாலும் நம்மில் எத்தனை பேர் முழுமையாக அதன் பொருள் உணர்ந்து நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்பது கேள்விக்குறியானது.இதுவரை அதன் பொருள் உணர்ந்து நாம் படிக்காவிட்டாலும் இனிமேல் திருக்குறளின் உண்மை பொருள் அறிந்து அதை நம் வாழ்க்கை நெறியாக கொள்வதே சிறந்தது.திருவள்ளுவர் புகழை சிலை வைத்து ,கோட்டம் அமைத்து பரப்பலாம். அதைவிட முக்கியமானது திருக்குறளை நம் வாழ்க்கை நெறியாக குழந்தை பருவம் முதல் இறப்பு வரை பின்பற்றுவதே நாம் திருவள்ளுவருக்கு ஆற்றும் மிகப்பெரிய பெருமையாகும்திருவள்ளுவர் வாழ்க்கை நெறியை
- அறம் ,
- பொருள்
- இன்பம்
திருக்குறளின் தத்துவமே " நல்வழியில் வாழ்ந்து,நல்வழியில் பொருள்சேர்த்து இன்பமான வாழ்வு வாழ்வதே ஆகும்".
பாயிரவியல் ( முன்னுரை )
--------------------------------------
- கடவுள் வாழ்த்து – கடவுளை வணங்குதல், நம் தாய் ,தந்தையரை வணங்குதல்
- வான் சிறப்பு – மழையின் பெருமை (இயற்கையின் சிறப்பு )
- நீத்தார் பெருமை – நமக்கு நல்வழியை காட்டிய நம் முன்னோர்களின் சிறப்பு,
- அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை வலியுறுத்திக் கூறுதல்
இல்லறவியல்
- இல்வாழ்க்கை – மனைவியோடு கூடிவாழ்தல்
- வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பு
- மக்கட்பேறு – அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதலின் சிறப்பு
- அன்புடைமை – அன்பு செலுத்துதல்
- விருந்தோம்பல் – விருந்தினரை உபசரிக்கும் முறைமை
- இனியவைகூறல் – இனிமையான சொற்களையே சொல்லுக
- செய்ந்நன்றி அறிதல் – பிறர் செய்த நன்மையை என்றும் மறவானை
- நடுவு நிலைமை
- அடக்கமுடைமை – உணர்வு தீயவழியில் செல்லாமல் அடக்குதல்
- ஒழுக்கமுடைமை – நல்ல நெறிகளை கடைப்பிடித்தல்
- பிறனில் விழையாமை – பிறனுடைய மனைவியை விரும்பாமை
- பொறையுடைமை – பொறுமை காத்தல்
- அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
- வெஃகாமை – பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை
- புறங்கூறாமை – பிறர் பற்றி கோள் சொல்லாமை
- பயனில சொல்லாமை – பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை
- தீவினையச்சம் – பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல்
- ஒப்புரவறிதல் – பொதுவான அறங்களை அறிந்து செய்தல்
- ஈகை – ஏழைக்கு இரங்குதல்
- புகழ் – நிலையான புகழ்
துறவறவியல்
- அருளுடைமை – எல்லா உயிர்களிடத்தும் செலுத்தும் இரக்கம்
- புலால் மறுத்தல்
- தவம் – மனத்தை அடக்கித் தவம்
- கூடா ஒழுக்கம்
- கள்ளாமை – பிறர் பொருள் விரும்பாமை
- வாய்மை – உண்மை பேசுதல்
- வெகுளாமை – கோபம் கொள்ளாமை
- இன்னா செய்யாமை – எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
- கொல்லாமை
- நிலையாமை – நிலைக்காமை
- துறவு – பொருள்களின் மீதுள்ள பற்றினை விடுதல்
- மெய்யுணர்தல் – உண்மையை உணர்தல்
- அவா அறுத்தல் – ஆசையினை ஒழித்தல்
ஊழியல்
- ஊழ் – விதியின் வலிமை
திருக்குறள் கூறும் வாழ்வியல் நெறியை அறம் பகுதியில் திருவள்ளுவர் என்ன சொல்ல போகிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள இயலும் என நம்புகிறேன் ..