Saturday, March 26, 2011 | By: kuraliniyan s

சிந்திப்போம் .......செயல்படுவோம் ....வாக்களிப்போம் ........

சிந்திப்போம் ....செயல்படுவோம் ....வாக்களிப்போம் .................

இந்த நேரத்தில் இந்த கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்று நான் நினைக்கிறேன் . "என்ன வளமில்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்" என்ற பாரதியின் வரிகளை நினைத்து கொண்டு சிந்திப்போம் . நமக்கு இலவசம் முக்கியமா ! நமது வளமையும் முன்னேற்றமும் ,மற்றும் எதிர்காலமும் முக்கியமா ! இலவசங்கள் நம்மை மயக்கும் ஆயதங்கள் ....நமது தமிழ் நாட்டுக்கு முக்கியமாக தேவை படுவது என்ன என்ன என்று விவாதிப்போம் ..
  1. தரமான சமச்சீர் கல்வி ...
  2. தடை அற்ற மின்சாரம்...
  3. காவிரி ,முல்லை பெரியார் தண்ணீர்...
  4. உழைப்புக்கு ஏற்ற ஊதியம்
  5. வேலை வாய்ப்பை பெருக்க தொழிற்சாலைகள்
  6. பல போக விவசாயம் செய்ய நவீன விவசாய முறை
  7. உற்பத்தியை பெருக்க அதி நவீன முறைகள்
  8. சாலை மற்றும் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்துவது
  9. ஊழலை அடியோடு ஒழிப்பது
  10. நோய் நொடி அற்ற வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ சேவை
இவைகள் இருந்தால் போதும் தேர்தல் அறிக்கைகளில் ...ஆனால் என்ன இருகின்றன ? இலவசங்கள் .இலவசங்களிள் யார் பயனடைய போகிறார்கள் ?எவ்வளவு காலங்கள் இந்த இலவசங்கள் நீடிக்கும் ?அதன் மதிப்பு என்ன?இப்பொழுதே பேரம் நடந்து கொண்டிருக்கும் மிக்சி ,கிரைண்டர் கம்பனிகளுடன் ..எனக்கு எவ்வளவு ? உனக்கு எவ்வளவு கமிசன் என்று ....மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் ..இல்லை எனில் நம் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததிகள் அழிவின் பாதைக்கு தான் செல்ல நேரிடும் ...
நாம் எதற்காக உழைக்கிறோம் மற்றும் சாம்பாதிக்கிறோம் ?..நம் உணவுக்காகவும் ..நம்முடைய கல்வி மற்றும் இதர தேவைகளுக்காகவும் தான் !என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் ...
நாளை தண்ணி பிரச்சினையால் நம் விவசாயம் நிலை குலைந்தால் ...
அரிசி மற்றும் உணவுபொருட்களின் விலை பன்மடங்கு உயரும்....
நமக்கான தேவையை நாம் பூர்த்தி செய்யும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும் ..நமது உணவு உற்பத்தி அதிகரித்தால் தானாகவே உணவு பொருட்களின் விலை குறையும் ..நம் நாட்டின் பொருளாதாராமும் அதிகரிக்கும் .நாமும் செழித்து வளரலாம் ...
நாளை மின்சார பற்றா குறையால் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டால் ? உற்பத்தி குறையும் ..விலைவாசி உயரும் ..வேலை
பறிபோகும் . நான் சொன்ன அனைத்தும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே ..சிந்திப்போம் .செயல்பாடுவோம் ..வாக்களிப்போம் ..இலவசங்களை புறந்தள்ளி வளமான தமிழகம் மிளிர பாடுபடுவோம் ...

நன்றி
இனியன்